லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
2009 அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை சிகாகோ லெமாண்ட் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆறுதினங்களும் காலையில் யாகம், அதைத் தொடர்ந்து அபிஷேகம், விசேஷ அலங்காரம், மாலையில் சஹஸ்ரநாம அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றன.

கந்த சஷ்டி அன்று காலை யாகத்துடன் துவங்கி, பால்குட அபிஷேகம், காவடி ஆட்டம், சூரசம்ஹாரம், பின்னர் ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸமேத சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன. சிறப்பு அலங்காரங்களின் நிறைவாக ஏலக்காய் அலங்காரம் செய்விக்கப்பட்டது. சுமார் 10 பவுண்ட் ஏலக்காய்களைப் பயன்படுத்தி அர்ச்சகர்கள் அலங்காரம் செய்திருந்தனர். நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

கி. வெங்கடேச குருக்கள்,
லெமாண்ட், இல்லினாய்ஸ்

© TamilOnline.com