அக்டோபர் 24, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் 'கலக்கல் தீபாவளி' விழா கிளாசன் நகர மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக ஒன்றை ஒன்று மிஞ்சுகிற மாதிரி குழந்தைகளும், பெரியவர்களும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். தேவிகா ராகவன், ராதிகா கணேசன் ஆகியோரின் மாணவிகளின் பிரமிக்க வைக்கும் பரதமும் மற்றும் ஏராளமான சிறு குழந்தைகளின் திரைப்பாடல் நடனங்களும் கண்ணுக்கு விருந்து.
40க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற லலிதா ரவியின் அக்ரஹாரத்தில் இயல் இசை நாடகம் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. நிரஞ்சன் ராவ் இயக்கத்தில் 'டெட்ராயிட் பிஸ்தா' வழங்கிய 'Desparate Husbands' மற்றும் சாயி கணேஷ் அவர்களின் நகைச்சுவை நாடகங்கள் அனைவரையும் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தின. ஸ்ரீதர் வைத்தியநாதன் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி ஒரு இனிய நிறைவாக அமைந்தது.
விழாவில் சி.கே. சாலக்கோட் தம்பதிகளுக்கு தமிழ்ச் சங்கத்தின் மிகச் சிறந்த உறுப்பினர்கள் விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கிய சங்கத் துணைத்தலைவி கல்பனா ஹரிஹரன் பேசுகையில் இவர்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் ஆதரவையும் சங்க நிர்வாகப் பொறுப்பில் இருந்து செய்த சேவைகளையும் பாராட்டிப் பேசினார்.
பிச்சையா பாலசுப்ரமணியன், அமுதா, மிச்சிகன் |