அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
அக்டோபர் 24, 2009 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கம் (AZTS) தீபாவளித் திருநாளை மெஸ்கைட் ஜூனியர் பள்ளியில் விமர்சையாகக் கொண்டாடியது. அரிசோனா தமிழ்ச் சங்க வரலாற்றில் முதன் முறையாக 550 வருகையாளர்களுடன், அரங்கம் நிறைந்த சாதனையாக அமைந்தது. நிகழ்ச்சி அரிசோனா தமிழ்ப்பள்ளி (ATP) ஆசிரியைகள் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைவர் சுரேஷ் ரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். அடுத்து அரிசோனா தமிழ்ப் பள்ளியின் நூற்றுக்கு மேலான மாணவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குறிப்பாக ஆப்பிரிக்கக் காட்டுப்புலி நடனம், அரசவை, உப்பு சத்தியாகிரகம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், புகைவண்டி நிலைய நாடகம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன.

செல்வன் கோகுல் ராமதாஸ் கம்பீரமாக வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலும், செல்வன் யஸஷ் அருண் அமைதியான காந்தி வேடத்திலும் மிகமும் அருமையாக நடித்திருந்தனர்.

ஜெயஸ்ரீ கணேசன் குழுவினரின் வட இந்திய நடனம், ராஜி ஸ்ரீனிவாசன் குழுவினரின் கோலாட்டமும், கரகாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரையாட்டமும் கை தட்டலைப் பெற்றன. சதீஷ் நாரயணன் வழங்கிய நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிந்தது.

தெய்வா மெய்யப்பன்,
அரிசோனா

© TamilOnline.com