ஜனவரி 9, 2010 அன்று அட்லாண்டாவில் உள்ள Gwennit Arena Performing Arts Center அரங்கில் நடைபெற இருக்கும் நாட்டிய நிகழ்ச்சியில், தாஸ்யம், சிந்தனம், சங்கீர்த்தனம் போன்ற பக்தியின் ஒன்பது வகைகளைத் தொன்மையான இந்தியப் பாரம்பரிய நடனங்களான ஒடிசி, கதக், பரதநாட்டியம், குச்சுபுடி ஆகியவற்றின் வழியே சித்திரிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்படும் நிதி இவ்வமைப்பு இந்தியாவில் செய்துவரும் பல்வேறு சமூகநலப் பணிகளுக்குப் பயன்படும்.
பத்மஜா கேலம், உமா புலந்தரன், சித்தார்தி கேலம் - பரதநாட்டியம் குமுத் காவ்யா, சம்தா சாவ்லா - கதக் சசிகலா பெனுமார்த்தி - குச்சுபுடி சங்கீதா ரங்காலா - ஒடிசி
நுழைவுச்சீட்டுகள்: $35, $45, $65, $100
மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி: 404-914-1627, 770-490-5096
இணையதளம்: atlanta.aidindia.org
விஜயா ஸ்ரீதரன்அட்லாண்டா |