ராதாமோகனின் பயணம்
வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட 'மொழி' படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்க இருக்கும் படம் 'பயணம்'. இதை பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாராக இருக்கும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். தெலுங்கில் கதாநாயகனாக நடிப்பது நாகார்ஜுனா. தமிழில் நாயகன், நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. டூயட் மூவிஸ் தயாரிக்கும் படங்களை மட்டுமே இயக்குவது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.

அரவிந்த்

© TamilOnline.com