நாசரின் 'மகாராஜா'
இளைய தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான முக்கியப் பிரச்னையை மையமாக வைத்து உருவாகி வரும் புதிய படம் 'மகாராஜா'. நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராகப் பணியாற்றிய டி. மனோகரன் இப்படத்தை இயக்குகிறார். நாசர், சத்யா ஆகியோர் கதாநாயகர்கள். அவர்களுடன் இணையாக கற்றது தமிழ் அஞ்சலி, அனிதா ஆகியோர் நடிக்கின்றனர். தவிர, எம்.எஸ்.விஸ்வநாதன், கருணாஸ், சரண்யா, கோவை சரளா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை நடிக்காத வித்தியாசமான அல்ட்ரா மாடர்ன் இளைஞராக நாசர் இப்படத்தில் நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com