செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
கணேஷ் வெங்கட்ராமன் - 'அபியும் நானும்' படத்தில் த்ரிஷாவின் சர்தார்ஜி காதலராக வந்து கலகலப்பூட்டியவர். கமல் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள கணேஷ் தற்போது 'முறியடி' என்ற படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தைக் 'கவிதாலயா' தயாரிக்கிறது. இயக்கம் - செல்வா. தற்போது 'நான் அவன் இல்லை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் செல்வா, அப்படம் முடிவடைந்ததும் இதன் பக்கம் திரும்புவார். படத்தில் கணேஷ் வக்கீலாக நடிக்கிறார். ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இமான் இசையமைக்க, பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com