விஜய்யின் 50வது படம்
'காதலுக்கு மரியாதை' படத்தைத் தயாரித்த சங்கிலி முருகன், விஜய்யைக் கதாநாயகனாக வைத்துத் தயாரிக்கும் படம் 'சுறா'. ஜோடி தமன்னா. இதில் விஜய் மீனவர் வேடமேற்று நடிக்கிறார். அதனால் கேரளத்தில் மீனவர் வசிக்கும் பகுதிகளிலும், தமிழகத்தில் உப்பளங்கள் அதிகம் உள்ள மரக்காணம் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிரஞ்சீவி மகன் நடித்த 'மகதீரா' படத்தில் வில்லனாக நடித்த தேவ் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படம் விஜய்க்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்குவது எஸ்.பி. ராஜ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com