பாலாவின் இயக்கத்தில் விஷால்
'சேது', 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்' உள்ளிட்ட வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படத்தைத் தயாரிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். இதுவரை யாருக்காகவும் தன் படத்தின் கதையை வெளியே சொல்லாத இயக்குநர் பாலா, இப்படத்திற்கான கதையை விஷாலிடம் முன்னரே தெரிவித்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com