ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். 'நான் கடவுள்' படத்தைத் தயாரித்த வாசன் விஷூவல் வென்ச்சர் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஆர்யாவுக்கு ஜோடி நயன்தாரா. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com