இரவில் கேட்டது
ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரம். அந்த வயலின் வித்வான் சாதகம் செய்து கொண்டிருந்தார். யாருமறியாமல் முக்காடிட்டு ஒரு உருவம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது. விடிய விடிய சாதகம் செய்த அந்த வித்வான் மறுநாள் விடியற்காலைதான் உறங்கச் சென்றார். அந்த உருவமும் அதன்பின் அங்கிருந்து சென்று விட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல பல நாட்களாக இது தொடர்ந்தது. மழை, பனி, பூச்சிக் கடி என்று எதற்கும் அஞ்சாமல் ஒளிந்திருந்து அந்த வயலின் வித்வான் சாதகம் செய்வதைக் கேட்டு ரசித்தது அந்த உருவம்.

ஆண்டுகள் பல கடந்தன. சென்னையில் ஒரு நாதசுரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மிக அற்புதமாக சாரங்காவை வாசித்தார் நாதசுர வித்வான். அதைக் கேட்டு உள்ளம் உருகி, "ஆஹா, பிரமாதம், பிரமாதம். இதுதான் உண்மையான சாரங்கா!" என்று பாராட்டினார் முன்பு இரவுநேரத்தில் சாதகம் செய்த அந்த வயலின் வித்வான்.

"எல்லாம் அவ்விடத்து ஆசிர்வாதம்தான். ஐயா அவர்கள் வாசிப்பைக் கேட்டுக் கேட்டுத் தான் அடியேனும் ஏதோ வாசிக்கிறேன்" என்று பதிலளித்தார் நாதசுர வித்வான் பணிவுடன். அவர் வேறு யாருமல்ல; பல ஆண்டுகளுக்கு முன்னால் வயலின் வித்வானின் வாசிப்பை இரவில் முக்காடிட்டு ஒளிந்திருந்து கேட்டவர் தான்.

அது சரி யார் அந்த இசை மேதைகள்?

விடைகள்

© TamilOnline.com