இலங்கை சின்மயா கிராம வளர்ச்சி சங்கம் வவுனியாவில் (zone 4 முகாம்) தஞ்சம் புகுந்திருக்கும் 1000 இடம்பெயர்ந்த தமிழர் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டுத் தலா 1000 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் கொழும்பு சின்மய மிஷன் பிரம்மசாரி தர்ஷன் சைதன்யா அவர்களின் தலைமையில் சின்மய யுவகேந்திர அங்கத்தினர்கள் கலந்துகொண்டனர். எண்ணற்ற பிற குடும்பத்தினர் தமக்கும் பண உதவி செய்யும்படி உருக்கமாக வேண்டிக்கொண்டதன் பேரில், நத்தார் பண்டிகை, தைப்பொங்கல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் நிதி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகச் சங்கத்தின் தலைவர் கௌரி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர இவர்களுக்குப் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள், அவற்றுக்கான கருவிகள் ஆகியவற்றைச் சங்கம் தொடர்ந்து வழங்கிவருவதை முன்னரே தென்றல் கட்டுரைகளில் தெரிவித்துள்ளோம். இந்தப் பணிகளில் நீங்களும் உதவலாம். உங்கள் நன்கொடையை 'Chinmaya Mission West' என்ற பெயருக்குக் காசோலையாக அனுப்பவேண்டும். காசோலையில் கீழே "CORD-Sri Lanka" என்று தவறாமல் குறிப்பிடுங்கள். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323
அனுப்ப வேண்டிய முகவரி: Chinmaya Mission West, Meera Raja, 2246 West Cullom Ave., Chicago, IL 60618, USA. |