நான் கண்ட அமெரிக்கா
பரந்து விரிந்த அமெரிக்கா
பலரும் வியக்கும் அமெரிக்கா
நிரம்பத் திறமை கொண்டவரால்
நிமிர்ந்து விளங்கும் அமெரிக்கா

தனியோர் மனித சுதந்திரத்தைத்
தரணியில் பெரிய தென்பவராம்
மனிதரை மனிதர் அடக்குவதை
மாநில மெங்கும் எதிர்ப்பவராம்.

எத்தனை எத்தனை இனமக்கள்
இங்கே கூடி வாழுகிறார்
அத்தனை வகையோர் வாழ்ந்தாலும்
அனைவரும் அன்பாய் வாழுகிறார்.

நெல்லை காந்திமதிநாதன்,
லோமா லிண்டா, கலி.

© TamilOnline.com