தேவையான பொருட்கள்: ராகி மாவு - 1/2 கிண்ணம் அரிசி மாவு - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப பொட்டுக்கடலை மாவு - 1/4 கிண்ணம் நெய் - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை எள் - 1 தேக்கரண்டி எண்ணெய் - பொரிக்க
செய்முறை: மாவுகளை ஒன்றாகக் கலந்து அதில் எள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசையவும். அதில் நெய் உருக்கி ஊற்றி கெட்டியாக (முறுக்கு மாவுப்பதம்) பிசைந்து, முறுக்கு அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து நன்கு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
ராதாமணி சின்னையன், நியூஜெர்சி |