தேவையான பொருட்கள்: இட்டலி அரிசி - 2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி பச்சை அரிசி - 1/4 கிண்ணம் தக்காளி - 3 (நடுத்தரமானது) பூண்டு - 4 பல் இஞ்சி - 1 துண்டு சோம்பு - சிறிதளவு மிளகாய் வற்றல் - 6 பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு (தாளிக்க) - 1/4 தேக்கரண்டி வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் கறிவேப்பிலை (நறுக்கியது) - 1 தேக்கரண்டி கொத்துமல்லி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி எண்ணெய்- சிறிதளவு
செய்முறை: இட்டலி அரிசி, பச்சை அரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், சிவப்பு மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து முக்கால் பதம் அரைந்ததும், அதனுடன் தக்காளியை நறுக்கிச் சேர்த்து தோசை மாவுப் பதம் வரும்வரை நைசாக அரைக்கவும். அரைத்த மாவில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் கலக்கவும். கொத்துமல்லித் தழையைச் சேர்த்து கலக்கி தோசையாக ஊற்றவும்.
ராதாமணி சின்னையன், நியூஜெர்சி |