தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு
சுற்றுச்சூழல் களத்தில் நோபல் பரிசாகக் கருதப்படும் 'ஸ்டாக்ஹோம் வாட்டர் பிரைஸ்' இந்த ஆண்டு இந்தியரான டாக்டர் பிந்தேஷ்வர் பாட்டக்குக்குத் தரப்பட்டுள்ளது. 'சுலப் இன்டர்நேஷனல்' என்ற சுகாதாரம் சார்ந்த அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் பாட்டக். அது, சுகாதாரம், உடல்நலம், நீர்வளங்களைப் பாதுகாப்பது போன்றவற்றில் சிறப்பான பணியாற்றி வருகிறது. ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற விழாவில், அந்நாட்டு இளவரசர் கார்ல் பிலிப் டாக்டர் பிந்தேஷ்வருக்குப் பரிசு வழங்கி கவுரவித்தார்.© TamilOnline.com