ஷீரடி சாயி பரிவார்: ராம நவமிக் கொண்டாட்டம்
கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் உள்ள ஷீரடி சாயி பரிவார் ராம நவமியைச் சிறப்பாகக் கொண்டாடினர். ஏப்ரல் 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதிகளில் இரு பகுதிகளாக Reliance Technical Services Complex, சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.

பாபாவின் திருஉருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளே வைக்கப் பட்டிருந்தது. பக்கத்து அறையில் அனுமன் பற்றிய கார்ட்டூன் படம் காட்டியதுடன் ஸ்ரீ இராமரின் பெருமையை இளம் சிறாருக்கு ஷீரடி சாயி பரிவாரத்தினர் அழகாக எடுத்துக் கூறினர்.

ஸ்ரீ இராம அஷ்டோத்திர நாமாவளி, சாயி மஹிமா, ஹனுமான் சாலிஸா ஆகியவற்றை ஓதினர். பின்னர் சாயி பஜன் நடந்தது. அதன்பின் சாயி பாபாவுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சிலர் பகிர்ந்து கொண்டனர். ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

வரப்போகும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விரும்புபவர்கள் www.shirdisaiparivaar.org என்ற வலைதளத்தில் சென்று பதிவு செய்துகொண்டால் அழைப்பிதழ் பெறலாம்.

தமிழில்: சரஸ்வதி தியாகராசன்.

© TamilOnline.com