தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை
தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள தாய் விழுதுகள் அறக்கட்டளை திரு நங்கையர் எனப்படும் அரவாணிகளைக் கொண்டு 'மென்மை இட்டலிக் கடை என்ற கடையைத் திறந்துள்ளது. மற்றவரைப் போலவே அரவாணிகளும் தங்கள் கையால் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற உணர்விலேயே இக்கடையை ஆரம்பித்துள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். அரவாணிகளே நடத்தும் முதல் இட்டலிக் கடை என்ற பெருமை கொண்ட இக்கடையில் 24 திருநங்கையர் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். இக்கடை 12 வகை இட்டலிகளை விற்குமாம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலும் விரைவில் கிளைகள் திறக்கப்பட உள்ளன.



© TamilOnline.com