தெரியுமா?: சமைக்காமலே சோறு!
சமைக்காமலே சாப்பிடும் புதிய ரக அரிசியை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் உருவாக்கியுள்ளனர். ஒரிசாவின் கட்டாக் நகரில் அமைந்துள்ளது இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம். உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வரும் இந்நிறுவன விஞ்ஞானிகள் இந்த அரிசிக்கு 'அகானிபோரா' என்று பெயரிட்டுள்ளனர். இந்த அரிசியை நீரில் 45 நிமிஷங்கள் ஊறவைத்தால் போதும், சாதம் தயார்! வெந்நீர் என்றால் 15 நிமிஷங்கள்தாம்.

"மரபணு மாற்றத்தின் மூலம் இந்த அரிசியை நாங்கள் உருவாக்கவில்லை. பிறவகை இந்திய அரிசிகளைப் போன்றதுதான் இதுவும். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இந்த அரிசியை உண்டாக்கியுள்ளோம். மற்ற அரிசிகளில் உள்ள அனைத்துச் சத்துகளும் இதில் உண்டு" என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

© TamilOnline.com