பேரா. இளங்கோ இலக்கிய உரை
அக்டோபர் 18, 2009 அன்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேரா. இளங்கோ அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தின் நுண்ணிய கூறுபாடுகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி கூபர்டினோ, கலிபோர்னியாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியை LocalBizNetwork நிறுவனர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பேரா. இளங்கோ பழந்தமிழ் கவிதைகளில் மிளிரும் உயரிய வாழ்வியல் நெறிமுறைகள், நீதி, ஞானம், சொல்லாட்சி, சந்த, இசை நயங்கள் முதலானவற்றை வியக்கும் வகையில் புறநானூறு, பரிபாடல், திருக்குறள், குறுந்தொகை, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், கந்தர் அனுபூதி ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கினார். கவிதையை ஆழ்ந்து, கவிஞனின் மனநிலையில் அனுபவிக்க வேண்டும் என்பதை “அணிசேர் காவியம் ஆயிரம் கற்பினும், ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்!" என்னும் பாரதி வரிகளை மேற்கோள் காட்டி வலியுறுத்தினார்.

ஓர் இனிய இலக்கிய அனுபவமாக இந்தச் சொற்பொழிவு அமைந்திருந்ததென்றால் மிகையல்ல.

டில்லி துரை,
கூபர்டினோ, கலி.

© TamilOnline.com