அக்டோபர் 24, 2009 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா, பிரிஸ்டல் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. எல்லிங்டன் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, இளைஞரணி பாடிய அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. சங்கத் தலைவி திருமதி. ஸ்ரீமதி இராகவன் வரவேற்றார்.
சன் டிவி புகழ் ஈரோடு மகேஷின் கலக்கல் காமெடியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. கனெக்டிகட் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான காரணத்தினால் ஈரோடு மகேஷ் அனைவரையும் அக்கா, அண்ணன் என உரிமையுடன் அழைத்து காமெடியில் கலக்கினார். பின் 'ஜெர்சி ரிதம்ஸ்' வழங்கிய இசைநிகழ்ச்சி 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி'யுடன் துவங்கியது. அருமையான பாடகர்கள், அசத்தலான இசை என 45 நிமிடங்கள் இசைமழை பொழிந்தனர்.
இடைவேளைக்குப் பின் ஈரோடு மகேஷின் அடுத்த பகுதி காமெடியைத் தொடர்ந்தது 'ஜெர்சி ரிதம்ஸ்' இசை மீண்டும். 'மின்சாரக் கண்ணா', 'அப்படிப் போடு', 'வாளமீணுக்கும்', 'நாக்கமுக்க' ஆகியவை பார்வையாளர்களை ஆட்டம் போட வைத்தன. இரமணன் அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.
தகவல்: உமா சேகர், கனெக்டிகட் புகைப்படங்கள்: ஜெரால்டு ஜெயராஜ் |