மார்கழி - 16
'நீங்கள் கேட்டவை', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பானுசந்தரின் மகன் ஜெயந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மார்கழி - 16. தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீநிதி இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த சந்திரா, ஸ்ரீதேவி, வனிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜெயவிஷால் ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. “இக்கதை நிஜமும், கற்பனையும் கலந்த ஒரு யதார்த்தமான கதை. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். மார்கழி 16-ல் நடைபெறுகின்ற ஒரு முக்கியச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் ஸ்டீபன். இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இசை: பாபி. படத்தொகுப்பு: சாய்சுரேஷ். வசனம்: பச்சை பெருமாள்.

அரவிந்த்

© TamilOnline.com