மார்ச் 25, 2006 அன்று கலி·போர்னியா மாநில பல்கலையின் ஹேவர்ட் அரங்கில் குரு லதா ஸ்ரீராம் அவர்களின் சிஷ்யையும், ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் மாணவியு மான ரஞ்சனி சுகுமாரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது.
'நின்னுக்கோரி' (வசந்தா) வர்ணத்துக்குப் பின் 'மஹா கணபதிம்' கீர்த்தனையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ரஞ்சனி தன்னுடைய எடுப்பான சாரீரம், சுத்தமான சுருதியுடன் ஆரம்ப வர்ணத்திலேயே திறமையை நன்கு வெளிப்படுத்தினார். 'இன்னவும் தயவு' என்ற என்.எஸ். ராமச்சந்திரனின் கீர்த்தனை நிகழ்ச்சியின் நடுநாயகமாக விளங்கியது. சண்முகப்ரியாவில் ராகம் பாடிய பின் ரசித்து அனுபவித்து கல்பனா ஸ்வரம் பாடியது மிகவும் இனிமை.
மீரா பஜன், பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே', தில்லானா, திருப்புகழ் யாவும் செவிக்கு ரம்மியமாக ஒலித்தன.
இழைந்து ஒலித்த பக்கவாத்தியங்களை ரமேஷ் ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்), திவ்யா ராமச்சந்திரன் (வயலின்) வாசித்தனர்.
குரு லதா ஸ்ரீராமுக்கும் தனக்கும் இவர் புகழ் சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை.
ஜானகி சீதாராமன் |