நவம்பர் 2009 குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்கெழுத்துப் புதிர்கள் பெரும்பாலும் அவற்றில் இருக்கும் புத்திசாலித்தனத்தால் நம்மை வெகுவாகக் கவரும். அட, என்ன புதுவிதமாக ஒரு சொல்லை இவர் நோக்குகிறாரே என்ற எண்ணத்தையும் வியப்பையும் தோற்றுவிக்கும். அப்படி இலவசக் கொத்தனார், அபாகு, யோசிங்க என்ற மூவருடைய புதிரும் பலமுறை எண்ண வைப்பதைக் காணலாம். இப்போது பூங்கோதை என்பவர் முதன்முதலாகப் புதிரை வடித்துள்ளார். அதன் விடைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாதபோது கூட எட்ட நின்று நாம் அதை ரசிக்கலாம்! அவருடைய குழந்தையை நாம் கையிலெடுத்துத் தூக்கி விளையாட வேண்டாம். தமிழ்ச் சொற்களெனும் குழந்தையைப் புதிதாக ஈன்றெடுத்த தாயின் பூரிப்புடன் அவர் கொஞ்சி விளையாடுவதைப் பார்ப்பதே நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதைப் பார்க்க இங்கே செல்லுங்கள்

குறுக்காக
1. முற்றுப்பெறா வானம் அடங்க ஒரு மொழி உண்டானது (5)
4. வாளை வைத்துக்கொள்ள கரிகாலனுக்குத் தலைநகரில் பாதி வேண்டும் (2)
6. பிரிக்க முடியாத நூல் பிணைப்பும் மாட்டும் (4)
7. மரம் வெட்டி மரணம் அவ்விடம் நுழைய தெய்வம் தோன்றும் (4)
9. விவரங்கள் நீக்கப்பட்ட கதை முட்டையில் மஞ்சளாயிருக்கும் (5)
12. சிவசிவா, திருமணமான காளையா? (4)
14. இப்போதே பயன்படுத்தும் நிலையில் உதயா ராகவனைப் பிடித்துவிட்டாள் (4)
17. திருவருட்பா ஆசிரியர் போற்றியதைப் பரீட்சை செய்துபார் (2)
18. வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துப்போகாத அரசுப் பள்ளி மாணவர்க்கு பலமாகப் போடப்படும் (5)

நெடுக்காக
1. இதையடைந்தவர் மேலே செல்வதில்லை! (3)
2. மக்களாட்சியில் இதைப் பிரயோகித்தோர்க்குக் கறை படிந்த கரம்தான் (5)
3. உயிரும் மெய்யும் நீக்கி அணைத்து மயங்கியிருக்க ஆதரவாய் ஒருவர் (2)
4. சாப்பிடுவதற்கு அம்மா சென்றதும் உன் அண்ணனை... (3)
5. உள்குத்து எல்லாம் தேவையில்லை, சிந்தி (4)
7. நெருங்கிவர அழகாய்த் தொடங்கும் கரும்பின் வளையம் எதிர்வரும் (3)
8. எட்டு துணியைத் துவைக்க ஈட்டி முனை (4)
10. சுக்ராசாரியருக்கு மாப்பிள்ளை முறுக்கு நெடுங்காலமிருந்தது (3)
11. ருது சியாமளா பாதியும் மேனகை இடையும் கொண்டால் நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும்தான் (5)
13. (16இல் பார்க்கவும்)
15. ஒரு நிலையில் இருந்துகொண்டு உள்ளே போகவிடாமல் செய்யும் (3)
16. & 13. சபாபதி தேக்கும் பாகும் வழிந்தோட கொடியில் நாட்டம் (2, 3)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

அக்டோபர் 2009 விடைகள்

© TamilOnline.com