ஆகஸ்ட் 15, 2009 அன்று க்ளீவ்லாண்ட் நகர சிவ-விஷ்ணு ஆலய அரங்கில் செல்வி சௌந்தர்யா நாராயணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடந்தது. சௌந்தர்யா 4 வயது முதலே இசை பயின்று வருகிறார். சாந்தி ராகவன் அவர்களின் ராகப்ரியா கர்நாடக இசைப் பள்ளியிலிருந்து வெளிவந்த முதல் மாணவியும் ஆவார்.
விநாயகப் பெருமான் மீது 'வாதாபி கணபதிம்' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து 'காமாக்ஷி', 'பரலோக பயா', 'செந்தில் ஆண்டவன்', 'சர்வம் பிரம்ம மயம்', 'ஜகதோத்தாரண', தில்லானா போன்றவற்றைச் சிறப்பாகப் பாடினார்.
'செந்தில் ஆண்டவன்' பாடலை விஸ்தாரமாகப் பாடியவர், 'ஜகதோத்தாரணா'வை பாவமுடன் பாடி பரவசப்படுத்தினார். திருமதி பவானி மல்லஜோஸ்யுலா (வயலின்), இந்திரேஷ் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.
குரு திருமதி சாந்தி ராகவன், அவருடைய மகள் 'சங்கீத பாஸ்கரா' திருமதி ஸ்ருதி ராகவன் ஆகியோரின் தளராத 12 வருட காலப் பயிற்சி, சௌந்தர்யாவின் இசையில் தெளிவாகத் தெரிந்தது. கென்ட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிலவிருக்கிறார் சௌந்தர்யா என்பது கூடுதல் தகவல். |