ஆகஸ்ட் 23, 2009 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதில் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி இயக்குனர் கானசரஸ்வதி அவர்கள் தலைமையில் மதியம் 1மணி முதல் மாலை 5 மணிவரை கலைஞர்கள் நிகழ்த்திய இசைக் கச்சேரி ரசிகப் பெருமக்களை பக்தி வெள்ளத்தில் முழுக்காட்டியது. கலைஞர்கள் கீதம், ஜதிஸ்வரம், ஸ்வரஜதி, க்ருதி, கீர்த்தனை, உத்ஸவ சம்ப்ரதாயம், நாமாவளி, தேவாரம், திருப்புகழ் இன்னிசை மலர்கள் தூவி கணபதியை அலங்கரித்தனர். வர்ஷா (கீபோர்ட்), ஆஸ்ரிதா (புல்லாங்குழல்) ஆகியோரின் வாசிப்பு அருமை. சக்திசுந்தர், வர்ஷா, சுசித்ரா, காவ்யா, ஸ்ரீகர், சர்வேஷ் வழங்கிய இசை செவிக்கு விருந்து.
இசைப்பள்ளியின் இயக்குனர் (கானம்) கானசரஸ்வதியும் அவரது மகள் சங்கீதாவும் பக்திப் பாடல்களை வழங்கினர். கானசரஸ்வதியின் சொந்த க்ருதிகள் அருமை. ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்), லியோனஸ் (கடம்), சுந்தர் மோவ்வா (டேம்பொரீன்) பக்கம் வாசித்துச் சோபிக்கச் செய்தனர்.
தமிழ்ச்செல்வி |