சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா'
டிசம்பர் 12, 2009 சனிக்கிழமை அன்று ஒன்பதாவது தங்க முருகன் விழா சிகாகோவிலுள்ள லெமான்ட் இந்து ஆலயத்தில் கொண்டாடப்பட உள்ளது. தங்க முருகன் விழா கடந்த 8 ஆண்டுகளாக இங்கே விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அருள் பெறுகின்றனர். முக்கியமாக, குழந்தைகள் வேடம் புனையும் 'பாலமுருகன் காட்சி' பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்வதாகும். நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும்.

இதில் பங்கு கொள்ள விரும்பும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும்:

புவனா - 630.922.6954
தேவகி - 630.851.1636

நிகழ்ச்சிகள் முருகனைப் பற்றிய ஆடல், பாடல்களாக இருக்க வேண்டும்.

கலை சோமசுந்தரம்,
சிகாகோ

© TamilOnline.com