நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
அக்டோபர் 25, 2009 அன்று மாலை 5:00 மணிக்கு நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி 'Bellz 'n' Beats' என்ற தனது முதல் தயாரிப்பைப் பாலோ ஆல்டோவிலுள்ள கபர்லி அரங்கில் வழங்கவிருக்கிறது. நாட்டுப்புறக்கலை, ஃப்யூஷன், சமகால நடனம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்ச்சி இருக்கும். கலை இயக்குனர் ஜனனி நாராயணன் அவர்களின் நடன வடிவமைப்பு நாம் வாழும் சமூகக் கலாசாரத்தின் உற்சாகமூட்டும் அம்சங்கள் மீது ஒளிவீசிக் காண்பிக்கிறது. பளிச்சிடும் பட்டாடைகள், எழிலான மேடையமைப்பு போன்றவை கண்களுக்கு விருந்தாகும் என்பதில் ஐயமில்லை. ஏ.ஆர். ரஹ்மானின் மின்சாரப் பாடல்களோடு பிற இசைக்கலைஞர்களின் கனிவான தெம்மாங்குகளும், கம்பீரமான சேர்ந்திசையும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து பரிமளிக்கும்.

2004ல் தொடங்கப்பட்ட நிருத்யகல்யா தனது தனித்தன்மைக்குப் பெயர் பெற்றுள்ளது. இதன் கலைஞர்கள் OSAAT (One School at a Time), இந்திய கலாசார மையம் (ICC) ஆகிய அமைப்புகளின் விழாக்களில் நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து பெறப்படும் வருவாய் AID (Association for India's Development) அமைப்புக்குக் கொடுக்கப்படும்.

நுழைவுக் கட்டணம்: $12 (adults); $10 (children under twelve).
சீட்டுகள் வாங்க: bnbtix@gmail.com
அல்லது
ஸ்ரீலதா - 408.868.9667
ஜனனி - 408.774.1910

அதிகத் தகவலுக்கு: www.bellznbeats.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com