ஏப்ரல் 9, 2006 அன்று சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை லாஸ் காடோஸ் புட் ஹில் கல்லூரியில் உள்ள ஸ்மித்விக் அரங்கத்தில் கொண்டாடியது.
கலிபோர்னியா தமிழ்க் கழகம் (http://www.catamilacademy.org) மற்றும் தமிழ் பண்பாட்டு மையத்தின் (http://www. bayareatamilmanram.org/eng/batcc.php) நிதி திரட்டு விழாவாக இது அமைந்திருந்தது.
துணைத்தலைவர் முஸ்தபா அகமது அனைவரையும் வரவேற்றார். விழாவின் முதற்பகுதியாக பாரதி நாடக மன்றம் சார்பில் பாகீரதி சேஷப்பன் மற்றும் ரூபன் மோகன் துணையோடு மணி மு. மணிவண்ணன் இயக்கி வளைகுடாப்பகுதி வாழ் தமிழர்கள் பங்கேற்ற பேரா. இந்திரா பார்த்தசாரதியின் 'ராமனுஜர்' நாடகம் நடைபெற்றது. பேராசிரி யருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார் மன்றத் தலைவர் தில்லை குமரன். (இது குறித்த விவரங்களை மற்றொரு செய்தியறிக் கையில் காணலாம்).
இடைவேளைக்குப் பின்பு 'ராகலயா' எனும் புதிய இசைக்குழு 'என்றென்றும் புன்னகை' எனும் தலைப்பில் கலைநிகழ்ச்சியை வழங்கிற்று. துணைத்தலைவர் டி.ஸ். ராம் 'ராகலயா'வை அறிமுகப்படுத்தினார். செயலாளர் டில்லி துரையின் நன்றி யுரையுடன் விழா இனிதே முடித்தது. |