சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம்
சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் வடஅமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் கனடாவின் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்திய பின் அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் பல ஆன்மீக நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்.

தென்ன்னிந்தியாவைச் சேர்ந்த ஞானகுருவான பரமஹம்ச நித்யானந்தர், ஒவ்வொரு தனிமனிதனிடத்தும் உள்ளார்ந்த ஆனந்தத்தை மீளக்கொண்டுவரும் உன்னதப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

அவர் தனது எளிய போதனைகளாலும் சக்திவாய்ந்த தியான உத்திகளாலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களை ஆரோக்கியமானவர்களாகவும் ஆனந்தமயமானவர்களாகவும் உருமாற்றிக் கொண்டிருக்கிறார்.

சக்திவாய்ந்த 'கல்பதரு' நிகழ்ச்சி தவிரப் பதஞ்சலியின் யோக சூத்திர மூலபாடத்தைப் பற்றிப் பேச இருக்கிறார். யோகம் என்பது வெறும் ஆசனமோ பயிற்சியோ அல்ல, வாழும் ஞானத்துக்கான கருவி என்ற பேருண்மையை உணர்த்த வருகிறார். நித்யானந்த ஸ்புரண நிகழ்ச்சி (NSP) சுவாமிஜியின் பிரசித்திபெற்ற வாராந்திர நிகழ்ச்சியாகும். வலியையும் அச்சத்தையும் வென்று கூடுதல் தெளிவோடு வாழ்வை அமைத்துக் கொள்வதற்கென வடிவமைக்கப்பட்டது. வாழும் ஞானகுரு ஒருவரோடு பெறக்கூடிய உன்னத அனுபவத்தைப் பெறும் வாய்பைத் தவற விட்டுவிடாதீர்கள்.

நிகழ்ச்சித் திட்டம்
நாள்இடம்நிகழ்ச்சிஅனுமதி
Oct 4சான் ஹோசே, CAகல்பதருமுன்பதிவு தேவை
Oct 6சியாட்டில், WAகல்பதருமுன்பதிவு தேவை
Oct 8செயிண்ட் லூயி, MOகல்பதருமுன்பதிவு தேவை
Oct 9சிகாகோ, ILயோகசூத்திரம்இலவசம்
Oct 10சிகாகோ, ILகல்பதருமுன்பதிவு தேவை
Oct 11டெட்ராயிட், MIகல்பதருமுன்பதிவு தேவை
Oct 12கொலம்பஸ், OHகல்பதருமுன்பதிவு தேவை
Oct 13கொலம்பஸ், OHகுவாண்டம் அறிவுமுன்பதிவு தேவை
Oct 20ஓக்லஹாமா, OKகல்பதருமுன்பதிவு தேவை
Oct 21டல்லாஸ், TXயோகசூத்திரம்இலவசம்
Oct 22டல்லாஸ், TXகல்பதருமுன்பதிவு தேவை
Oct 23ஹூஸ்டன், TXகல்பதருமுன்பதிவு தேவை
Oct 24ஷார்லட், NCயோகசூத்திரம்இலவசம்
Oct 25வின்ஸ்டன் சலேம், NC கல்பதருமுன்பதிவு தேவை
Oct 30நியூயார்க், NYயோகசூத்திரம்இலவசம்
Oct 31நியூயார்ம், NYகல்பதருமுன்பதிவு தேவை


YOGAM மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களை அறிய: www.yogam4you.org
தமிழில் அவரது பேச்சைக் கேட்க: http://www.youtube.com/Dhyanapeetamtn
தொலைபேசி: 909.625.1400

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com