அருண் விஜயின் 'மாஞ்சாவேலு'
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'மலை மலை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இணைந்து இன்னொரு படத்தை அளிக்க உள்ளனர். 'மாஞ்சாவேலு' என்று பெயர். இதில் அருண் அதிரடி ஆக்‌ஷன் நாயகன். உடன் பிரபு, பிரகாஷ்ராஜ், சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்காக இதுவரை இந்திய சினிமாவில் இடம்பெறாத 'ஸ்கை டைவிங்' எனப்படும் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து குதிக்கும் காட்சி இடம்பெற இருக்கிறது. பயிற்சிக்காக லண்டன் சென்றிருக்கிறார் அருண் விஜய்.

அரவிந்த்

© TamilOnline.com