'திருநங்கை'யில் திருநங்கைகள்
'அரவாணிகள்' என்று சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் படம் 'திருநங்கை'. இதில் கலாட்சேத்திராவில் நடனம் பயிலும் ல‌க்சயா என்ற திருநங்கை கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் கார்த்திக் மூவிஸ் தயா‌ரிக்கும் இப்படத்தை 'நேசம் புதுசு' படத்தை இயக்கிய வேல்முருகன் இயக்குகிறார். மேலும் பல திருநங்கைகள் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் ஒரு திருநங்கை கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல்முறை. இசை அமைக்கிறார் சுந்தர் சி.பாபு.

அரவிந்த்

© TamilOnline.com