2009 நவம்பர் 5 முதல் 8 வரையிலான நாட்களில் 7-வது சான்ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசியத் திரைப்பட விழா (SFISAFF) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5, 6 தேதிகளில் ராக்சி தியேடரிலும், அதை அடுத்த இரண்டு நாட்களில் கேஸ்ட்ரோ தியேடரிலும் விழாப் படங்கள் திரையிடப்படும். இந்தியா, பங்களாதேசம், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளின் 14 படங்கள் விழாவின் போது திரையிடப்பட உள்ளன.
இறுதிநாளன்று இந்தியாவின் பெண் பொலீஸ் அதிகாரியான கிரண்பேடியைக் குறித்த 'Yes Madam, Sir' என்ற படம் திரையிடப்படும் சந்தர்ப்பத்தில் கிரண்பேடி மற்றும் படத்தைத் தயாரித்த மெகன் டோனகன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வருகை தருகின்றனர். 'Zero Bridge', 'Supermen of Malegaon', 'Warrior Boyz', 'Bombay Summer' போன்ற பல சுவையான திரைப்படங்களை கண்டுகளிக்க இந்த விழா ஓர் வாய்ப்பாக அமைகிறது.
விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் தர்ட் ஐ (thirdi.org). விழா குறித்த அதிகத் தகவலுக்கு மின்னஞ்சல் அனுப்ப: sponsorship@thirdi.org.
இணைந்து பணியாற்றத் தொண்டர்களாக விரும்புவோர் தொடர்புகொள்ள: volunteer@thirdi.org
தகவல்: அருண் வைத்யா |