ஐஃபோனில் ஆடு-புலி ஆட்டம்
உங்களிடம் ஐஃபோன், ஐடச் அல்லது ஐபாட் இருந்தால் நீங்கள் ஆடு-புலி ஆட்டம் ஆடலாம். மிகப் பழமையான இந்த ஆட்டத்தில் மூன்று புலிகளும் 15 ஆடுகளும் உண்டு. காய்களை மிகச் சாமர்த்தியமாக நகர்த்தி, ஆடுகளைப் புலி வெட்டிவிடுகிறதா, இல்லை ஆடுகள் புலியை அசையவிடாமல் செய்கின்றனவா என்பதுதான் ஆட்டம். நேரம் போவதே தெரியாது. இந்த ஐஃபோன் விளையாட்டில் நீங்கள் ஆடாகவோ புலியாகவோ இருக்கலாம். உங்கள் கைக்கருவி எதிர்ப்பக்கத்தை ஆடும்.

சுரேஷ் செல்லப்பா இதை ஐஃபோனுக்காக வடிவமைத்து 'Strike or Shield' என்று பெயரிட்டிருக்கிறார். எளிது, நடுத்தரம், கடினம் என்று மூன்று நிலைகளில் இதை ஆடமுடியும். அது மட்டுமல்ல, ஆடும்போது புலியின் உறுமலையும் ஆடு கத்துவதையும் கேட்கலாம். இதை உங்கள் கருவியில் தரவிறக்கம் செய்ய: itunes.apple.com



© TamilOnline.com