கலைவாணர் என்.எஸ.கிருஷ்ணனிடம் ஒருவர் வந்து "அண்ணே, விஷயம் தெரியுமா? பக்கத்துத் தெரு பெரியசாமி சம்சாரம் யார்கூடவோ ஓடிப்போய்ட்டாங்களாம்" என்றாராம். நிதானமாகக் கிருஷ்ணன் அவர்கள் "ஆமாம், உன் பாக்கெட்டில் எவ்வளவு சில்லரைக்காசு வச்சிருக்கே?" என்று கேட்டாராம். ஏதோ அவசரத் தேவைக்குக் காசு கேட்கிறார் என்று நினைத்து "பார்த்துத்தான் சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் கையை விட்டாராம். உடனே கிருஷ்ணன் "உன் பாக்கெட்டில் உள்ள சில்லரையையே எண்ணிப் பாத்துதான் சொல்லணும்கிறே. இன்னொருத்தன் விஷயத்தை மட்டும் எண்ணிப் பாக்காம சொல்றது சரியா?" என்றாராம் நிதானமாக.
டாக்டர் அலர்மேலு ரிஷி |