ஜோக்ஸ்
நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?

கைதி: மகாத்மா காந்தியை ஒரே ஒரு முறை நேர்ல பாத்துட்டு நான் சாகணும் எசமான்.

*****


ராமு, உன்னை வைரஸ் கிருமியோட படத்தை வரைஞ்சிட்டு வரச் சொன்னேனே, ஏன் நோட்ல வரைஞ்சிகிட்டு வல்ல...?

டீச்சர், நான் வரைஞ்சிருக்கேன். ஆனா, நீங்க மைக்ராஸ்கோப்புல பாத்தாதான் அது தெரியும்.


*****


சே, அந்தக் கடைக்காரன் நல்லா என்னை ஏமாத்திட்டான்...

ஏன், என்னாச்சு..

ஓடாத வாட்சை என் தலையில கட்டிட்டான்...

அட, வாட்சை கையிலதான் கட்டுவாங்க. நீ ஏன் தலையில கட்டுற வாட்சை வாங்கின?

*****


என்ன சார், மேரேஜுக்கு நிறைய பந்து எல்லாம் எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க... யாருக்கும் கிஃப்டா தரப்போறீங்களா என்ன?

இல்ல சார், கல்யாண பத்திரிகைல இஷ்டமித்ர பந்துக்களோட வரவும்னு போட்டிருந்துச்சே, அதான் எடுத்துக்கிட்டு வந்தேன்...

ஸ்ரீ

© TamilOnline.com