குறுக்காக:
5. தெற்காசியாவில் புனித நகர் (2)
6. ஆச்சரியங்கொண்டு மிதித்தோர் மயங்குவர் (6)
7. தேவையான ஒரு கனி போனது வேறுவிதமாய் (4)
8. வாசப்பூ கைவிட்டாலும் வாசத்தழை கொத்த மறந்தாலும் சாம்பாருக்குத் தேவையானது கிடைத்துவிடும் (3)
9. பற்றில்லாதவன் சேர்த்தது மூன்றிலொரு முத்து போன்ற மனைவி (3)
11. தெளித்த விதை ஓரம் வெட்டி சுத்தமான சூழலில் வைக்கப்படும் (3)
13. பக்காத் திருடன் மாட்டிக்கொள்வானென்று எதிர்பார் (4)
16. மாஸ்கோ காட்டவா? மெய்யின்றித் திசைமாறி இந்தியாவுக்கு வழி காட்டினார் (6)
17. தண்ணீரை வெளியேற்ற ஆணையிட்டால் சிற்பி ஏற்றுக் கொள்வார் (2)
நெடுக்காக
1. மனமுருகி இளக இறுதியாக ஓர் ஆறு சங்கமித்தது (4)
2. மர்மமானது, இதுவரை இல்லாதது, சுமாரான குற்றமின்றிச் சேர்ந்தது (5)
3. துண்டு மரம் மரத்தைத் துண்டாக்க உதவும் (3)
4. நீர் வற்ற, பால் துளி மிஞ்ச, தாளித்த தின்பண்டம் (4)
10. அவலட்சண காவி மேற்புறமாய் கட்டிய ரமா வதனம் தவமிழந்தது (5)
12. இது கெட்டவர்கள் ஏடாகூடமாய்ப் பேசவும் நடக்கவும் செய்வர் (4)
14. அழகி மேலே செல்ல வம்பர் பாதி தொடர்வது திடமாக இல்லை (4)
15. பழந்தமிழ்ப் பெண்கள் குணம் அங்கே மதப்பணியையே குறிக்கோளாகக் கொண்டவரை நாடச் செய்யும்! (3)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
vanchinathan@gmail.com
செப்டம்பர் 2009 புதிர் விடைகள்குறுக்காக: 3. கசங்காத, 6. ரசவாதி, 7. தண்டம், 8. கலம்பகம், 13. சவுகரியம் 14. பாராமல் 15. மனதார, 16. பின்னடைவு
நெடுக்காக: 1. சுரங்கம், 2. ஆவாரம்பூ 4. சபதம், 5. காட்டம், 9. கனவு, 10. கரிசனம் 11. கம்பீரம், 12. வராகன் 13. சல்லடை
செப்டம்பர் 2009 புதிர் மன்னர்கள்
ஸ்ரீனிவாசராமானுஜம், இல்லினாய்,
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
எஸ். பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
மற்றவர்கள்
V.N. கிருஷ்ணன், சான்டா கிளாரா, கலி.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்ஸி
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா