தேவையான பொருட்கள் மக்காச்சோள மணிகள் (உறையவைத்தது) - 1/2 கிண்ணம் பால் - 4 கிண்ணம் சர்க்கரை - 1 கிண்ணம் ஏலக்காய்ப் பொடி -1/4 தேக்கரண்டி வறுத்த முந்திரி - 6 பருப்பு குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை சோள மணிகளை (frozen corn) சிறிது பாலுடன் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் மூன்று நிமிடங்கள் வேகவைக்கவும். பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதில் வேகவைத்த சோளத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு ஏலக்காய்பொடி, குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளவும். வறுத்த முந்திரிப் பருப்பை மேலாகப் போடவும். சாப்பிட்டால்.... ம்ம்ம்.... சுவையோ சுவை!
பின்குறிப்பு: பால் சுண்ட காய்ச்சத் தாமதமானால் பாலுடன் 1/2 கிண்ணம் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து உபயோகிக்கலாம்
பிரேமா நாராயணன், இல்லினாய்ஸ் |