GATS வருடாந்திரச் சுற்றுலா
அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் (GATS) வருடாந்திர இன்பச் சுற்றுலா அட்லாண்டாவின் மிகப் பெரிய டிரிப்பில்மில் பார்க்கில் நடந்தது. ஒஸோரா ஏரிக்கரையில் அமைந்த இந்தப் பூங்காவில், முதலாவதாக நடந்த தோசைப்போட்டியில் சூடான கேழ்வரகு தோசை பிரமாதம். இனிப்புப் பலகாரப் போட்டியும் நடந்தது. வெற்றி பெற்றோருக்கு சங்கத் தலைவர் சாந் குப்புசாமி பரிசுகள் வழங்கினார். அவர், மகிழுலாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த என். ராஜா, டி. அனிதா, இந்திரா, பூங்கோதை, ராஜ், சிவா, அனு ஆகியோரைப் பாராட்டியதோடு, அனைவரையும் அக்டோபர் 31, 2009ல் நடைபெறவுள்ள தீபாவளி, தமிழ் மையத் தொடக்கம் மற்றும் நன்கொடைத் திருவிழாக்களுக்கு அன்போடு அழைத்தார்.

FeTNA விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டுப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மதியம், வயதானவர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரவாரமாகத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வயதுவாரியாக நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்திப் பரிசுகள் வழங்கினார்.

சாந் குப்புசாமி, அட்லாண்டா

© TamilOnline.com