ஜூலை 25, 2009 அன்று லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம் கொண்டாடப்பட்டது. வரவிருக்கும் 2010 ஜூன் மாதத்தில் இந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது. அதற்கு முன்னோடி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. இதில் 17 நடனப் பள்ளிகளின் 90 மாணவர்கள் பங்கேற்று இசை, கதக், பரதநாட்டியம், பலமொழி நாடகங்கள் ஆகியவற்றை வழங்கினர். புனல் பாவ்சார் மற்றும் ப்ரியா சங்கர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
பண்டிட் சுப்ரமண்யா சர்மாவின் பிரார்த்தனைப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு பிரிவில் பங்கேற்றவர்களுக்கும் திருமதி பார்வதி, திருமதி சுப்பராமன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். திரு ஆனந்த் குண்டு தொழில்நுட்பச் சங்கதிகளை மேற்பார்வை செய்தார். தாரிணி பாஸ்கரன், அர்ச்சனா ரங்கநாதன், பத்மஜா மதுசூதன், சுமன் ஜெயின், சவிதா செட்லூர், ஸ்ரீகலி வாரணாசி ஆகியோர் வெவ்வேறு பொறுப்புகளை ஏற்று இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவினர். திரு டி.கே., திரு ராஜகோபால் ஆகியோர் புகைப்படம் எடுத்தனர். எல்லாவற்றுக்கும் மேல் திருமதி பத்மா சுப்பராமன் மொத்தப் பொறுப்பாளராக இருந்து செயல்வீரர்களை ஒருங்கிணைத்தார். மகா கும்பாபிஷேகக் கமிட்டியின் டாக்டர் கமலா சங்கர், திரு பிரகாஷ் போகலா ஆகியோர் நிகழ்ச்சி ஒரு பல்சுவைக் கதம்பமாக அமைவதில் ஆர்வம் காட்டினர்.
புனால் பாவ்சார், லிவர்மோர், கலி. |