ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
ஆகஸ்ட் 1, 2009 அன்று ப்ளூமிங்க்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழாவைக் கொண்டாடியது. இந்த விழாவில் ப்லூமிங்டன், பியொரியா, சிகாகோ ஆகிய நகரங்களில் இருந்து சுமார் 200 குடும்பங்கள் பங்கு கொண்டன.

விழாவுக்காக ஒரு இந்தியக் கடைவீதியையே அமைத்து அதில் ஒரு டீக்கடை போன்ற செட் போட்டு அசத்தி விட்டார்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் இருந்தன. பெரியவர்கள் மியூசிகல் சேரில் ஒடும்போது "வேகமா ஓடுங்கள்" என ஒருவர் சொல்ல அதற்கு ஒருவர் ஓடி விழுந்துட்டா யார் இன்சூரன்ஸ் தருவது" எனக் கமெண்ட் அடித்தார்.

சிறுவர்களுக்கான கரோக்கி பாடல்களில் சிறுவன் நிகில் விஜய் ‘முகுந்தா முகுந்தா' பாடல் பாடினார். சிறுவர்களுக்கான கிராமிய நடனமும் நடந்தது. திரியம்பக் ரிஷி "ஒவ்வொரு பூக்களுமே" பாடலைச் சிறப்பாகக் கீபோர்டில் வாசித்து முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தவர்கள் நரேந்திரன் ராமலிங்கம், யுவராஜ் ஷண்முகம் மற்றும் ரவி சந்திரன்.

கிரி

© TamilOnline.com