மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்த அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார். எதிர்க்கட்சிகள் தேர்தல் விதியை நடராஜ் மீறியதாகத் தேர்தல் கமிஷனிடம் புகார் கொண்டு செல்ல, கமிஷனும் அவரை இடமாற்றம் செய்யும்படித் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்துத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யத்தேர்தல் ஆணையத்திற்கு அதிகார வரம்பு முழுமையாக இல்லை என்று கூறிவிட்டதோடு ஆணையத்தின் உத்தரவு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் கூறிவிட்டது. இவ்விஷயத்தில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் மோதல் போக்கைக் கைவிட்டு இணக்க மான முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது முக்கியமானதாகும்.
இதையடுத்துத் தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஏப்ரல் 13, 2006 அன்று அதிகாரப் பூர்வ அரசாணை வெளியிட்டது மட்டுமல்லா மல் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் நடராஜை மாற்றுவதற்கு ஏதுவாக வேறு மூன்று நபர்களின் பெயர்களைச் சிபாரிசு செய்யும்படித் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.
தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படிச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் நடராஜனின் இடத்தில் கூடுதல் டிஜிபியாக இருந்த லத்திகா சரணை நியமித்தது. இப்பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேடிஸ்ரீ |