ஆகஸ்ட் 22, 2009 அன்று சிகாகோ தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் இன்பச் சுற்றுலாவாக நேப்பர்வில் பூங்காவுக்குச் சென்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஜெயமோகன் வந்திந்தார். விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பின், ஜெயமோகன் சிறப்புரை ஆற்றினார். தமிழ் மொழியின் செழுமை, தமிழர் பண்பாடு, நாகரிகம் பற்றியும், அவை தமது படைப்புகளில் எவ்வாறு கையாளப்பட்டன என்பது பற்றியும், உள்வாங்கித் தேடுதலின் அவசியம் பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். பின்பு கேள்விகளுக்கு பதில் உரைத்தார்.
சங்கத்தின் தலைவர் ரகுராமன் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு இருநூறுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சீனி குருசாமி, அறவாழி, கிங்ஸன், மீனா, ராஜி, சோமு, சேகர் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.
தகவல்: சந்திரசேகர் புகைப்படம்: சுப்ரமணியன் |