அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
2009 ஆகஸ்ட் 31 அன்று அக்ஷயா சேகரின் பரதநாட்டிய அரங்கேற்றம் மலிபூ (லாஸ் ஏஞ்சலஸ், கலி.) பெப்பர்டைன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. வயதில் குறைந்தவராக இருந்தபோதிலும் குரு சொல்லிக் கொடுத்ததைச் சரியாகப் புரிந்து கொண்டு தாளகதி, பாவம் தவறாமல் மிகச் சிறப்பாக நடனம் ஆடினார் அக்ஷயா. தன்யாசி வர்ணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒவ்வொரு லீலையையும் அற்புதமான பாவத்துடன் சிறப்பாக ஆடி வெளிக் கொணர்ந்தார். ரஞ்சனி ராகமாலிகா பதத்தில் தேவியின் அம்சங்களைச் சித்திரித்தது நன்றாக இருந்தது.

குரு மாலதி ஐயங்காரின் திறமையும் பயிற்சியும் அக்ஷயாவின் ஒவ்வொரு நடன அசைவிலும் நன்கு தெரிந்தது. மாலதி ஐயங்கார் (நட்டுவாங்கம்), நந்தகுமார் உன்னிகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), கிருஷ்ணன் குட்டியின் (வயலின்), குருமூர்த்தி (மிருதங்கம்), பிரகாஷ் ஹெக்டே (புல்லாங்குழல்) ஆகியோரின் பக்கம் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

இந்திரா பார்த்தசாரதி, லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com