ஹாலிவுட் படத்தில் ரம்பா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள ரம்பா தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 'க்விக் கன் முருகன்' என்ற பெயரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரம்பா பார் டான்சராகவும், குடும்பப் பாங்கான வேடத்திலும் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் ராஜேந்திரபிரசாத், நாசர் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர்கள், மும்பை நடிகர்கள் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காமெடியும் ஆக்சனும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். தமிழ், தெலுங்கு மற்றும் சர்வதேச மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரம்பாவின் சொந்த படமான 'விடியும் வரை காத்திரு' விரைவில் வெளியாகவிருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com