"வெளியில ஒரே பனியா இருக்கு! காதுல பஞ்சு வெச்சுக்கிட்டு போங்க தாத்தா" "இல்லாட்டி இன்னாடா ஆகும்?" "மூக்குல பஞ்சு வெக்கும்படி ஆயிடும்!"
சந்திரசேகர், எவர்கிரீன், கலி. ***
தாய் எலி: "எப்பவானாலும் சாஃப்ட்வேர் எஞ்சினீயர் வீட்டுக்குள்ள சுலபமாப் போலாம்" குட்டி எலி: "ஏம்மா?" தாய் எலி: "அங்கதான் எப்பவும் ‘விண்டோஸ்' ஓபன் ஆக இருக்கும்!" சந்திரசேகர், எவர்கிரீன், கலி. ***
"முந்தியெல்லாம் மாமனார் குழந்தைத் தனமா நடந்துக்கிறார்னு சொல்வியே. இப்ப எப்படி இருக்கார்?" "கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. இப்ப சிறுபிள்ளைத்தனமா நடக்கறார்."
முத்துலக்ஷ்மி சங்கரன், கோலடா, கலி. |