ஒருமுறை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடம் போட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்னென்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிப்பதாக ஒரு காட்சி.
ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று அரசன் கேட்டான். மந்திரி வசனத்தை மறந்து போய் ஒன்றும் புரியாமல் விழித்தார்.
இதை அறியாத அரசர் மீண்டும் ஒருமுறை சத்தமாகக் கேட்டார், "கலிங்க ராஜா என்ன கட்டினார்?"
கலைவாணர் உடனடியாக "வேஷ்டி" என்று சொல்ல, அரங்கமே அதிர்ந்தது.
|