1. நூறை நூறால் பெருக்கி அரையால் வகுத்து வரும் எண்ணுடன் நூறைக் கூட்டினால் வரும் எண் என்ன?
2. ஒரு பெற்றோருக்கு ஐந்து ஆண் குழந்தைகள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அப்படியென்றால் குடும்பத்தில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?
3. 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
4. 1, 3, 7, 15, 31, ...... தொடர் வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த் சுவாமிநாதன்
விடைகள்1. நூறை நூறால் பெருக்க; 100 x 100 = 10000; அதை அரையால் வகுக்க = 10000/0.5 = 20000.
அத்துடன் நூறைக் கூட்ட = 20100. ஆகவே விடை = 20100
2. பெற்றோர்கள் = 2; ஆண் குழந்தைகள் 5; ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு சகோதரிகள். அப்படியென்றால் 5 x 2 = 10 சகோதரிகள் என்று பொருளல்ல. மொத்த சகோதரிகள் 2. அவர்கள் ஒவ்வொரு ஆணுக்குமே சகோதரிகளாய் இருக்கின்றனர். ஆகவே சகோதரிகள் = 2.
ஆக மொத்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை = 2 (பெற்றோர்கள்) + 5 (ஆண்கள்) + 2 (சகோதரிகள்) = 9.
3. அடுத்து வர வேண்டிய எண் = -5. வரிசை 1, 2, 3 என ஏறு வரிசையிலும், -1, -3 என்று ஒற்றை இலக்கங்களின் ஏறு வரிசையிலும் இருப்பதால் அடுத்து வர வேண்டிய எண் = -5.
4. 2n-1 என்ற சூத்திரம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் எண் = 21-1 = 2-1 = 1
இரண்டாவது எண் = 22-1 = 4-1 = 3
மூன்றாவது எண் = 23-1 = 8-1 = 7
நான்காவது எண் = 24-1 = 16-1 = 15
ஐந்தாவது எண் = 25-1 = 32-1 = 31
ஆகவே அடுத்து வர வேண்டியது = 26-1 = 2x2x2x2x2x2x2 = 64-1 =63;
அடுத்து வர வேண்டிய எண் = 63