ஜூன் 7, 2009 அன்று ‘வாகனம் இயக்குதலும் பராபரிப்பும்' குறித்த செயற்பட்டறை ஒன்றை மிச்சிகன் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நோவை நகரப் பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் திரு. பிச்சையா பாலசுப்ரமணியம் வரவேற்புரை வழங்கினார். பட்டறையை நடத்திய திரு. ஹரி பிரசாத், காற்றுப் போன டயரை மாற்றுதல் வாகனத்தைப் பழுது பார்த்தல் போன்றவற்றை விளக்கியதோடு எஞ்சின் செயல்பாடு குறித்த விழிமக் காட்சியொன்றையும் காட்டி விளக்கினார். துணைத் தலைவர் கல்பனா ஹரிஹரன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
பிச்சை பாலசுப்ரமணியம், டிராய், மிச்சிகன் |