கலைஞரின் புதிய படங்கள்
கலைஞர் நீண்டநாட்களுக்கு முன் எழுதிய ‘சுருளிமலை' திரைப்படமாக உருவாக உள்ளது. படத்தின் பெயர் 'நீயின்றி நான் இல்லை'. படத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் கதாநாயகனாக உதய்கிரண் நடிக்கிறார். ஜோடியாக மீரா ஜாஸ்மின். நடிகை மனோரமா நீதிபதியாக நடிக்கிறார். கார்த்திகா, விவேக் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். ‘உளியின் ஓசை' படத்தை இயக்கிய இளவேனில் இதற்கு இயக்குநர். கதை, திரைக்கதை, வசனம் கலைஞர். அத்துடன் அவர் பத்திரிகையில் தொடராக எழுதிய ‘பொன்னர்-சங்கர்' என்ற கதையும் திரைப்படமாக உள்ளது. நடிகர் தியாகராஜன் இப்படத்தைத் தயாரிக்கிறார். பொன்னராகவும், சங்கராகவும் இரு வேடங்களில் பிரசாந்த் நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com